உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மீன் பிடிக்க சென்றவர் வலையில் சிக்கி பலி

மீன் பிடிக்க சென்றவர் வலையில் சிக்கி பலி

சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் மீன் வலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த முரார்பாளையம் திடீர் குப்பத்தை சேர்ந்தவர் முருகன், 40; திருமணமாகாதவர். இவர் தனது தங்கை இருசாயி வீட்டில் தங்கி விவசாய கூலி வேலை செய்து வந்தார்.நேற்று முன் தினம் முருகன் ஏரியில் மீன் பிடிக்க செல்வதாக கூறி சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை ஏரியில் முருகன் பிரேதம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதில் ஏரியில் இருந்த மீன் வலையில் சிக்கி இறந்து கிடந்த முருகன் உடலை மீட்டு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை