உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி 'டிட்டோஜாக்' சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி வட்டார கல்வி அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, 'டிட்டோஜாக்' ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சுதா, துணைத்தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் கென்னடி வரவேற்றார். தொடக்ககல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை ரத்து செய்தல், பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெறும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை கலந்தாய்வு பொது மாறுதல்களை நிறுத்தி வைத்தல், பொது கலந்தாய்வு அட்டவணையை மாற்றி, ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வு நடத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை