மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
9 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
9 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
12 hour(s) ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் மின்னல் தாக்கியதில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கோவிலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மின்னலுடன், லேசான தூரல் மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 4:50 மணியளவில் திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து சிதறி தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில் சாலையோரம் இருந்த ஐந்து கடைகளும் எரிய தொடங்கியது. அதிகாலை நேரம் என்பதால் போக்குவரத்து மிகுந்த சாலையில் யாரும் செல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் நாகேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விபத்து குறித்து ஆய்வு செய்ததில், மின்னல் தாக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் போர்கால அடிப்படையில் புதிய ட்ரான்ஸ்பார்மர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். பஸ் நிலையம் அருகே நடந்த இச்சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
9 hour(s) ago
9 hour(s) ago
12 hour(s) ago