உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு மருத்துவமனை வளாகத்தில் பயனின்றி ஆக்சிஜன் டேங்க்

அரசு மருத்துவமனை வளாகத்தில் பயனின்றி ஆக்சிஜன் டேங்க்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துமனையில் வளாகத்தில் அமைக்கப்பட்ட 'ஆக்சிஜன் டேங்க்' பயனின்றி உள்ளது.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்காக சில ஆண்டுகளுக்கு முன் 500க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் பொருத்தப்பட்ட படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டுகள் துவங்கப்பட்டன.லாரிகளில் கொண்டு வரப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களில் இருந்து ஆக்சிஜன் இதற்காக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் டேங்கில் ஏற்றி இருப்பு வைக்கப்பட்டு மாவட்டம் முழுதும் சிகிச்சைக்கு வருவோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டு, சிறுவங்கூருக்கு அரசு மருத்துவமனை மாற்றப்பட்டது. இதனால், கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்ட ஆக்சிஜன் டேங்க் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.எனவே பயன்பாடு இல்லாமல் இருந்து வரும் ஆக்சிஜன் டேங்க் கட்டமைப்பை மாவட்டத்தில் வேறு அரசு மருத்துவமனைக்கு மாற்றி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை