உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேன் கவிழ்ந்து விவசாயி பலி; 23 பேர் காயம்

வேன் கவிழ்ந்து விவசாயி பலி; 23 பேர் காயம்

கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே சுற்றுலா சென்ற டிராவல்ஸ் வேன் கவிழ்ந்து ஒருவர் இறந்தார். 23 பேர் படுகாயமடைந்தனர்.சின்னசேலம் அடுத்த நாககுப்பம் கிழக்கு காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் மணிமாறன், 31; விவசாயி. இவர், நாககுப்பம் மற்றும் மரவானத்தம் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் 23 பேருடன் டிராவல்ஸ் வேனில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு நேற்று அதிகாலை 4:30 மணியளவில் சுற்றுலா புறப்பட்டார்.வேனை கூகையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் ஓட்டினார். வேன் புறப்பட்ட சற்று நேரத்தில் அதிகாலை 5:00 மணிக்கு பாண்டியன்குப்பம் அருகே திடீரென வேன் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் மணிமாறன், குணசேகரன், சரவணன், விஜய், பிரேம்குமார் உட்பட 23 பேர் காயமடைந்தனர்.அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிமாறன் இறந்தார்.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி