உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புதிய காவலர் குடியிருப்பில் சுற்று சுவர் அமைக்கப்படுமா?

புதிய காவலர் குடியிருப்பில் சுற்று சுவர் அமைக்கப்படுமா?

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி கோட்டைமேடு புதிய காவலர் குடியிருப்பில் சுற்றுச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டில் பழைய காவலர் குடியிருப்பு அகற்றப்பட்டு சில ஆண்டுக்கு முன்பு 2 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய காவலர் குடியிருப்பு கட்டப்பட்டது.இங்கு தற்போது பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் பலர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புக்கு சுற்றுச் சுவர் இல்லாததால் கால்நடைகள் குடியிருப்பு வளாகத்திற்குள் மேய்கின்றன.மேலும் தரைதளத்தில் போலீசார் நிறுத்தி செல்லும் வாகனங்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு புதிய காவலர் குடியிருப்பு பகுதியில் போலீஸ்காரரின் பைக் திருடு போன சம்பவமும் நடந்துள்ளது.அதேபோல் காவலர் குடியிருப்பு பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் காலி இடங்களில் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் சூழ்நிலை நிலவி வருகிறது.எனவே, கள்ளக்குறிச்சி கோட்டைமேடு புதிய காவலர் குடியிருப்பில் சுற்றுச் சுவர் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை