மேலும் செய்திகள்
செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
2 hour(s) ago
இலங்கை தமிழர் குடியிருப்பில் ஆய்வு
2 hour(s) ago
பறிமுதல் வாகனங்கள் பாழ்
2 hour(s) ago
பாதை தொடர்பான தகராறு 10 பேர் மீது வழக்குப் பதிவு
2 hour(s) ago
திருக்கோவிலுார் பெரிய ஏரிக்கு வரும் வாய்க்கால் சீரமைக்கப்படாததால் விவசாய விளைநிலங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.திருக்கோவிலுார் பெரிய ஏரி 95 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் நேரடியாக பயன் பெறுகிறது. தென்பெண்ணையில் சிறிதளவு தண்ணீர் வந்தால் கூட ஆற்று வாய்க்கால் வழியாக ஏரிக்கு தண்ணீர் வந்து, நிரம்பி காாணப்படும்.ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர் கட்சிக்குச்சான், புதுார், ஆவிகொளப்பாக்கம், காட்டுப்பையூர், முதலுார் எல்ராம்பட்டு, கொடியூர், வடக்கு நெமிலி, அத்தாண்டமருதுார் உள்ளிட்ட ஏரிகளுக்கு சென்று நிரம்பும்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரிக்கான ஆற்று வாய்க்கால் முடியனுார் தென்பெண்ணை ஆற்றில் இருந்து துவங்கி, 7 கி.மீ., துாரம் வரை பயணிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆற்று வாய்க்காலில் 700 மீட்டர் துாரத்திற்கு மணல் மூடியது. அத்துடன் தென்பெண்ணையாற்றின் தடுப்பும் உடைந்தது.இதன் காரணமாக சாத்தனுார் அணையில் தண்ணீர் திறந்து விட்டாலும், திருக்கோவிலுார் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை.எனவே பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் சாகுபடி வரும் காலங்களில் கேள்விக்குறியாகி உள்ளது.தென்மேற்கு பருவமழையை கருத்தில் கொண்டு, பொதுப்பணித்துறை தென்பெண்ணையாற்றின் தடுப்பை சீரமைத்து, ஏறி வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் துார் வாருவதன் மூலம், திருக்கோவிலுார் ஏரி நிரம்பி அதன் மூலம் பயன்பெறும் பத்துக்கும் மேற்பட்ட ஏரிகளில் நீர் நிரப்ப முடியும்.இதன் மூலம் விவசாய நிலங்கள் பயன்பெறும். இல்லையென்றால், வானம் பார்த்த பூமியாக ஏமாற்றமே மிஞ்சும் என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.இதுகுறித்து ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுவும் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago