உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்சாரம் தாக்கி ஒயர்மேன் பலி

மின்சாரம் தாக்கி ஒயர்மேன் பலி

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே டிரான்ஸ்பார்மர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி ஒயர்மேன் இறந்தார்.சின்னசேலம் அடுத்த ராயப்பனுாரைச் சேர்ந்தவர் அத்தியப்பன், 45; இவர், ராயப்பனுார் மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணிபுரிந்தார். நேற்று காலை 8:30 மணியளவில் சமத்துவபுரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணியில் அத்தியப்பன் ஈடுபட்டார். அப்போது, அத்தியப்பன் மீது மின்சாரம் தாக்கியது.உடன் அவரை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அத்தியப்பன் இறந்தார்.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை