உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணை கட்டிப்போட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சி பெண் கைது: மேலும் ஒருவருக்கு வலை

பெண்ணை கட்டிப்போட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சி பெண் கைது: மேலும் ஒருவருக்கு வலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 22 வயது பெண்ணை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்த முயன்றது தொடர்பாக இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயதுடைய இளம்பெண். இவர் தனது உறவினரான செங்கல்பட்டு மாவட்டம், காட்டான்குளத்துாரை சேர்ந்த ஹரிதாஸ் மனைவி ரம்யா,29; என்பவரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு, ரம்யா கள்ளக்குறிச்சிக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.இதையடுத்து, நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி கரியாப்பா நகரில் உள்ள சின்னத்துரை மனைவி அஞ்சலை,31; என்பவரின் வீட்டிற்கு 22 வயது இளம்பெண் வந்துள்ளார். அங்கு ரம்யாவும், அஞ்சலையும் சேர்ந்து இளம்பெண்ணை துணியால் கட்டிப்போட்டு, விபசாரத்திற்கு ஈடுபடுத்த முயன்றுள்ளனர். அங்கிருந்து தப்பிய அந்தப் பெண், நடந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி கரியப்பா நகரை சேர்ந்த சின்னதுரை மனைவி அஞ்சலை,31; காட்டான்குளத்துாரை சேர்ந்தை ஹரிதாஸ் மனைவி ரம்யா ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து, அஞ்சலையை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ