கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மகளிர் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குனர் அபிநயா முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஏஞ்சலின் திருமறைச்செல்வி வரவேற்றார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவிகளுக்கு யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் யோகா சிறப்பு குறித்து பள்ளி மாணவிகளின் கலை நகழ்ச்சிகள் நடந்தது. திண்டிவனம்
திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சாணக்யா கல்வி குழும தலைவர் தேவராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் அருள்மொழி வரவேற்றார். பள்ளி துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் சாய்நாத், மணவளக்கலை யோகா பேராசிரியர் பழனிமூர்த்தி, பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தியாகதுருகம்
மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். முதல்வர் கலைச்செல்வி, அறிவு திருக்கோவில் அறங்காவலர் தங்கவேல் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் முத்துக்குமரன் வரவேற்றார். யோகா பேராசிரியர்கள் குணசேகரன், சாந்திரத்தி பயிற்சி அளித்தனர்.பள்ளி மாணவ, மாணவிகள் 3000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்று யோகாசனங்கள் செய்தனர். ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். விக்கிரவாண்டி
சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் குப்பன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர்கள் ஹெலன் மேரி, ஜெயந்தி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு யோகாவின் நன்மைகளை எடுத்து கூறி பயிற்சிகுறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் யோகாசன பயிற்சி பெற்றனர். என். எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.