மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
5 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
5 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
7 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை 50 ஆயிரத்து 273 பேர் பயன்படுத்தியுள்ளனர்.தமிழகத்தில், கடந்த 2008ம் ஆண்டு முதல் இலவச 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து 'இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ெஹல்த்' சர்வீஸ் நிறுவனம், 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களுக்கு சேவை அளிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டு 29 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்குகிறது.இதில், இருதயம் மற்றும் நுரையீரல் நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வெண்டிலேட்டர், ஈ.சி.ஜி., மானிட்டர், ஆக்ஸிஜன் போன்ற அதிநவீன கருவிகள் கொண்ட 3 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய அரசு மருத்துவமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பச்சிளம் குழந்தைகளுக்கான இன்குபேட்டருடன் கூடிய 2 ஆம்புலன்ஸ்கள் கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. நுாற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் மற்றம் மருத்துவ உதவியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.கடந்த 2023ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய 11 ஆயிரத்த 493 பேர், கர்ப்பிணி பெண்கள் 15 ஆயிரத்து 152 பேர் என மொத்தம் 50 ஆயிரத்து 273 பேர் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். இதுதவிர, கர்ப்பிணி பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், 79 குழந்தைகள் ஆம்புலன்சிலேயே பிறந்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு 37 ஆயிரத்து 562 பேர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்திய நிலையில், 2023ம் ஆண்டு கூடுதலாக 12 ஆயிரத்து 711 பேர் பயன்படுத்தியுள்ளனர். இத்தகவலை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார்.
5 hour(s) ago
5 hour(s) ago
7 hour(s) ago