உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பல்லி விழுந்த காலை சிற்றுண்டி சாப்பிட்ட 10 மாணவர்கள் உட்பட 13 பேர் அட்மிட்

பல்லி விழுந்த காலை சிற்றுண்டி சாப்பிட்ட 10 மாணவர்கள் உட்பட 13 பேர் அட்மிட்

ரிஷிவந்தியம்: அரசு நடுநிலைப்பள்ளியில் பல்லி இறந்து கிடந்த காலை சிற்றுண்டி சாப்பிட்ட 10 மாணவர்கள் உட்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த அவிரியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 153 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தில் தினமும் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.நேற்று காலை 8:00 மணியளவில் சமையலர்கள் ஜெயவள்ளி, ரேணுகா, சுலேச்சனா ஆகியோர் வெண்பொங்கல் தயார் செய்து, அதை சாப்பிட்டனர். பின்னர், பள்ளிக்கு வந்த 96 மாணவர்களுக்கு வெண்பொங்கல் பறிமாறியபோது, அதில் பல்லி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த, மாணவர்களுக்கு வழங்குவதை நிறுத்தினர்.இதற்கிடையே 1ம் வகுப்பு மாணவி பிரவீனா,6; 2ம் வகுப்பு சமித்தா,7; கவியரசு,7; 3ம் வகுப்பு அஸ்வினி,8; நயனா,8; கற்பகம்,8; 4ம் வகுப்பு ஷர்மிளா,9; குருபிரசாத்,9; 5ம் வகுப்பு தாருண்யா,10; தினேஷ்,10; ஆகியோர் பொங்கலை சாப்பிட்டனர். அவர்களில் கவியரசனுக்கு மட்டும் லேசான வாந்தி ஏற்பட்டுள்ளது.தகவலறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி தலைவர் திருமலை ஆகியோர் வெண்பொங்கல் சாப்பிட்ட 10 மாணவர்கள் மற்றும் 3 சமையலர்களை வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி, ரிஷிவந்தியம் ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், பி.டி.ஓ., ரங்கராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜூ உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை பார்வையிட்டு, அவர்களின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி