உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அண்ணாமலையாருக்கு 19ம் தேதி தீர்த்தவாரி

அண்ணாமலையாருக்கு 19ம் தேதி தீர்த்தவாரி

திருக்கோவிலுார்: திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் வரும் 19ம் தேதி தீர்த்தவாரி விழா நடக்கிறது.தட்சிணாபினாகினி என போற்றப்படும் புண்ணிய நதியாக விளங்கும் தென்பெண்ணையில், தைத்திங்கள் முதல் நாளிலிருந்து ஐந்து தினங்களுக்கு அனைத்து நதிகளும் தத்தம் தீவினையை போக்கிக் கொள்ள தென்பெண்ணையில் சேர்கிறது என்பது ஐதீகம்.சிறப்பு வாய்ந்த பெண்ணையில் திருவண்ணாமலை அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் ஆண்டு தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இதனை அடுத்து வரும் 18ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அண்ணாமலையார் புறப்பாடாகி பாதம் தாங்கிகளில் 19ம் தேதி மணலுார்பேட்டை வந்து அடைகிறார்.விநாயகர், அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் அண்ணாமலையாரை வரவேற்று தென்பெண்ணை நதிக்கு அழைத்துச் செல்லும் வைபவத்தை தொடர்ந்து தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது.தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பந்தலில் அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இவ்விழாவிற்காக நேற்று காலை 6:00 மணிக்கு தீர்த்தவாரி பந்தல் அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை