மேலும் செய்திகள்
பாலசுப்பிரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா
21 hour(s) ago
பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது
21 hour(s) ago
கார் டிரைவர் தற்கொலை
21 hour(s) ago
பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்
21 hour(s) ago
கள்ளக்குறிச்சி, -கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 201 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி 1 மற்றும் 2ல் 102 அரசு பஸ்கள், உளுந்துார்பேட்டை 53, திருக்கோவிலுார் 55, சங்கராபுரம் 38, சின்னசேலம் 32 என நாள்தோறும் 280 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கம், பா.ஜ., தே.மு.தி.க., உட்பட பல தொழிற்சங்கங்த்தினர் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேலைநிறுத்த போராட்டத்தால் நேற்று காலை பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்கவில்லை. குறிப்பாக, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயங்காததால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையே பயணிகள் சிரமத்தை போக்க தற்காலிக டிரைவர், கண்டெக்டர் மூலம் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொமுச வினர் பணியில் ஈடுபட்டனர்.நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியில்(2 டெப்போக்கள்)55, உளுந்துார்பேட்டை 34, திருக்கோவிலுார் 50, சங்கராபுரம் 35, சின்னசேலம் 27 என மொத்தம் 201 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.கண்டக்டர் பணிக்கு வந்த பெண்தற்காலிக ஊழியர்களை கொண்டு அரசு பஸ் இயக்கப்படுவதாக நேற்று தகவல் பரவியது. இதையொட்டி தியாகதுருகத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி விஜயா,34; என்பவர் கண்டெக்டர் பணி கேட்டு டெப்போக்கு வந்திருந்தார். முதல் முறையாக கண்டெக்டர் பணி கேட்டு பெண் ஒருவர் வந்திருந்தாலும் முன்அனுபவம் இல்லாததால் விஜயாவுக்கு பணி வழங்கப்படவில்லை.கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறியதாவது;கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி மாவட்டத்தில் அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்தும் உரிய முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago