உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 2,800 லிட்டர் ஊறல் அழிப்பு

2,800 லிட்டர் ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங்மீனா உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார், கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோரது தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, மட்டப்பாறை மேற்கு காட்டுக்கொட்டாய் மற்றும் தேக்கம்பட்டு வடக்கு ஓடை ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு தயாராக வைத்திருந்த சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்தனர்.தொடர்ந்து 13 பேரல்களில் இருந்த 2,800 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 3 லாரி டியூப்புகளில் இருந்த 120 லிட்டர் சாராயத்தை அங்கேயே கொட்டி அழித்தனர்.இது தொடர்பாக கச்சிராயபாளையம் மற்றும் கரியாலுார் போலீசார் வழக்குப்பதிந்து மட்டப்பாறையைச் சேர்ந்த ராமசாமி, சின்னசாமி, தேக்கம்பட்டு சந்திரன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை