உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தென்கீரனுார் மரசிற்ப மையத்தில் 3 நாள் பயிற்சி பட்டறை முகாம்

தென்கீரனுார் மரசிற்ப மையத்தில் 3 நாள் பயிற்சி பட்டறை முகாம்

கள்ளக்குறிச்சி : தென்கீரனுார் கிராமத்தில் மரசிற்ப கலை சிறுதொழில் மையத்தில் மரசிற்ப செதுக்குதல் 3 நாள் பயிற்சி பட்டறை முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் கிராமத்தில் உள்ள டோக்ரா மரசிற்ப கலை சிறுதொழில் மையத்தில் இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிதிஉதவியுடன் திருக்கோவிலுார் டான் இன்ஸ்டியூட் ஆப் ரூரல் டெவலப்மென்ட் நிறுவனம் இனைந்து மரசிற்ப செதுக்குதல் மூன்று நாள் பயிற்சி பட்டறை முகாம் நடந்தது.முகாமை தென்கீரனுார் ஊராட்சி மன்றத் தலைவர் வெண்ணிலா ஜெயபிரகாஷ், துணை தலைவர் சரண் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி , புவிசார் குறியீடு பெற்றுள்ள மரசிற்பகலைஞர்களின் மரசிற்ப செதுக்குதல் மூன்றுநாள் பயிற்சிபட்டறை முகாமை துவக்கிவைத்தனர்.திருக்கோவிலுார் டான் இன்ஸ்டியூட் நிர்வாக இயக்குனர் சுந்தர் வரவேற்றார். மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் சந்திரசேகரன், உதவிபொறியாளர் சிவநாதன் (தொழில்கள்) ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொழில்துறை சம்மந்தமான ஆலோசனைகளை வழங்கினர்.மரசிற்பகலை பயிற்றுனர்களான சிற்பிகள் சக்திவேல், முருகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.டான் இன்ஸ்டியூட் ஆப் டெவலப்மென்ட் நிர்வாகி அம்புளிமோகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி