உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாலிபரைத் தாக்கிய 3 பேர் கைது

வாலிபரைத் தாக்கிய 3 பேர் கைது

ரிஷிவந்தியம் : பாசாரில் முன்விரோதம் காரணமாக ஒருவரைத் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கான் மகன் செல்லதுரை, 23; இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தவறாக போன் செய்தது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் கடந்த 18ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் சுரேஷ் உட்பட 6 பேர் செல்லதுரையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில், சுரேஷ் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்து, சுரேஷ், தங்கராசு, 60; ராஜதுரை, 30; ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை