மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
18 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
18 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
21 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
21 hour(s) ago
தியாகதுருகம்: தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் 62.93 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் 290 விவசாயிகள் 2,109 மூட்டை விளைபொருட்களை கொண்டு வந்தனர். நெல் 1,745 மூட்டை, உளுந்து 342, கம்பு 8, மக்காச்சோளம் 8, தட்டை பயறு, துவரை, பச்சை பயறு தலா ஒரு மூட்டை உள்ளிட்ட விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.சராசரியாக ஒரு மூட்டை நெல் 3,039 ரூபாய், உளுந்து 9,540, கம்பு 5,774, மக்காச்சோளம் 2,169, தட்டை பயறு 4,589, துவரை 4589, பச்சை பயறு 7,089 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 62 லட்சத்து 93 ஆயிரத்து 639 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 170 விவசாயிகள், 969 மூட்டை விளைபொருட்களை மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வந்தனர்.அதன்படி, மக்காச்சோளம் 730 மூட்டை, உளுந்து 230, வரது 5, எள், பாசி பயிறு, நாட்டு கம்பு, எச்.பி., கம்பு தலா ஒரு மூட்டை என 170 விவசாயிகள் 969 மூட்டை விளைபொருட்கள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,238 ரூபாய், உளுந்து 8,699, வரகு 2,800, எள் 11,700, பாசி பயறு 8,049, நாட்டு கம்பு 5,610, எச்.பி., கம்பு 2,460 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 35 லட்சத்து 61 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் 8 விவசாயிகள் 38 மூட்டை விளைபொருட்களை கொண்டு வந்தனர். மக்காச்சோளம் 28 மூட்டை, வரகு 7, உளுந்து 5, ஒரு மூட்டை ராகி உள்ளிட்ட பயிர்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,251 ரூபாய், வரகு 2,709, உளுந்து 8,321, ராகி 2,319 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 724 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
18 hour(s) ago
18 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago