உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 38 இடங்களில் 78 கண்காணிப்பு கேமரா; திருக்கோவிலூரில் காவல் துறை தீவிரம்

38 இடங்களில் 78 கண்காணிப்பு கேமரா; திருக்கோவிலூரில் காவல் துறை தீவிரம்

திருக்கோவிலுாரில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு 38 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை காவல்துறை மேற்கொண்டுள்ளது.பொதுவெளியில் நடக்கும் குற்றங்களை முற்றிலுமாக தடுக்கும் பணியில் காவல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய சி.சி.டி.வி., கேமராவின் பங்கு முக்கியமானதாக உள்ளது. அப்படியே குற்றங்கள் நடந்தாலும் அதனை காட்டிக் கொடுக்கும் மூன்றாவது கண்ணாக இருக்கும் சி.சி.டி.வி., கேமராவை திருக்கோவிலூர் நகராட்சி முழுதும் பொருத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதற்காக அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை, சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டிய முக்கியமான இடங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 38 இடங்களில் 78 கேமராக்களை பொருத்துவது என போலீசார் முடிவு செய்துள்ளனர்.டி.எஸ்.பி., மனோஜ்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பாலாஜி மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர் திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியை காவல்துறை தற்போது மேற்கொண்டுள்ளது.கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பதன் மூலம், நகரில் ஏற்படும் குற்ற சம்பவங்கள், போக்குவரத்து நெரிசல்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை