மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
16 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
16 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
19 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
19 hour(s) ago
திருக்கோவிலுார்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருப்பாலபந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வான்நோக்கு நிகழ்வு நடந்தது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வானியல் தொடர்பான பரப்புரை மற்றும் தொலைநோக்கி மூலம் நிலா, வியாழன், செவ்வாய், சனி போன்ற கோள்களை காணும் வான்நோக்கி நிகழ்வு திருப்பாலபந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.மாவட்ட அறிவியல் பிரசார இணை ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்க திருக்கோவிலுார் ஒன்றிய பொருளாளர் பச்சையப்பன் வரவேற்றார். எழுத்தாளரும், அறிவியல் இயக்க வட சென்னை மாவட்ட செயலாளருமான தேன்மொழிச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வானியல் குறித்தும், தொலைதூர கோள்களை பார்வையிடுவது குறித்து மாணவர்களுக்கு தொலைநோக்கி வாயிலாக விளக்கி கூறினார். தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் அமைப்பினர் செய்திருந்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago