உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஏ.கே.டி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

ஏ.கே.டி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி: ஏ.கே.டி. நினைவு பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், கல்லுாரி சி.இ.ஓ., அபிநயா ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் தணிகைவேலன் வரவேற்றார்.முகாமில் சென்னை மிட்சுபா இந்தியா பிரைவேட் லிட்., ஊழியர்கள் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினர். இதில் எலக்ட்ரிக்கல் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். முகாமில் கலந்துகொண்ட பெரும்பான்மையான மாணவர்களும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நேர்காணலில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் சரவணன் உட்பட துறை தலைவர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். கல்லுாரி துணை முதல்வர் மணிக்கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை