மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை
04-Nov-2025
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
04-Nov-2025
வாகனம் மோதி மூதாட்டி பலி
04-Nov-2025
அக்ராயபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
04-Nov-2025
கள்ளக்குறிச்சி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 73 ஓட்டுச்சாவடிகளை மாற்றியமைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி என, நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. உளுந்துார்பேட்டை தொகுதியில் 337 ஓட்டுச் சாவடிகள், ரிஷிவந்தியம் 305, சங்கராபுரம் 300, கள்ளக்குறிச்சியில் 332 என, மொத்தம் 1274 ஓட்டுச் சாவடிகள் உள்ளன.இந்நிலையில், லோக்சபா தேர்தலையொட்டி, மாவட்டத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத ஓட்டுச்சாவடிகளை மாற்றியமைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தேர்தல் துணை தாசில்தார்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் உளுந்துார்பேட்டை தொகுதியில் 7 ஓட்டுச்சாவடிகளை இடம் மாற்றி அமைப்பது. 4 ஓட்டுச்சாவடியின் கட்டடங்களை மாற்றம் செய்வது. 3 ஓட்டுச் சாவடிகளின் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக கலந்தாய்வு செய்யப்பட்டது.அதே போல், ரிஷிவந்தியம் தொகுதியில் 3 ஓட்டு சாவடிகள் மாற்றியமைப்பது, 2 கட்டடங்கள் மாற்றம், 4 பெயர் மாற்றம், கள்ளக்குறிச்சி தொகுதியில் 6 ஓட்டுச் சாவடிகளை மாற்றியமைப்பது, 13 கட்டடங்கள் மாற்றம், சங்கராபுரம் தொகுதியில் 3 ஓட்டுச் சாவடிகளை மாற்றியமைப்பது, 17 கட்டடங்கள் மாற்றம், 11 பெயர் மாற்றம் என, மொத்தம் 73 ஓட்டுச்சாவடி மையங்களை மாற்றியமைப்பது தொடர்பாக கலந்தாய்வு செய்யப்பட்டது. பின்னர் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேர்தல் செலவினங்களை கணக்கிடுவதற்கு ஏதுவாக விலைப் பட்டியல் தயார் செய்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒப்புதலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சி பிதிநிதிகள் தங்களுடைய கருத்துகளை கடிதம் வாயிலாக வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு நடத்தப்படும் கூட்டங்கள் தொடர்பான கூட்டப் பொருட்களை முன்னதாக வழங்கிடவும் தேர்தல் பணி மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார். இதில் எம்.எல்.ஏ., செந்தில்குமார், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சங்கர், ஆர்.டி.ஓ., லுார்துசாமி, தேர்தல் தனி தாசில்தார் பசுபதி உட்பட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தி.மு.க., வெங்கடாசலம், தே.மு.தி.க., நல்லதம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025