உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கொடுத்த கடனைக் கேட்டு முதியவரை தாக்கியவர் கைது

கொடுத்த கடனைக் கேட்டு முதியவரை தாக்கியவர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கொடுத்த கடனைக் கேட்டு முதியவரைத் தாக்கி மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்கள்ளக்குறிச்சி அடுத்த அசகளத்துாரைச் சேர்ந்தவர் ராமதாஸ், 75; மளிகைக் கடை உரிமையாளர். இவரது 2வது மகன், அதே ஊரைச் சேர்ந்த ரமேஷிடம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.அதில் 2 லட்சம் ரூபாயை கொடுத்த நிலையில், ஒரு லட்சம் ரூபாயைத் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.கடந்த 8ம் தேதி மாலை ராமதாஸ் மளிகைக் கடைக்குச் சென்ற ரமேஷ், கடையில் இருந்த ராமதாசிடம், 'உன் மகன் எங்கே' என கேட்டு தகராறு செய்து திட்டி, தாக்கினார்.இது குறித்து ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் ரமேஷ், 31; மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ