மேலும் செய்திகள்
பாலசுப்பிரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா
7 hour(s) ago
பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது
7 hour(s) ago
கள்ளக்குறிச்சி, - வாணாபுரம் பகுதியில் அ.தி.மு.க., நிர்வாகியை தாக்கிய தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இது தொடர்பாக செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், கதிர்தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், இளந்தேவன், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் சீனிவாசன் உட்பட அ.தி.மு.க.,வினர் பலர் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், லாலாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்,43; அ.தி.மு.க.., கிளை செயலாளர். இவர் ஜெ., பிறந்த நாளையொட்டி தனது கடையின் முன்பு அ.தி.மு.க., கட்சி சார்பில் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார். தி.மு.க.,வைச் சேர்ந்த ஏந்தல் கிராமம் பெருமாள், அரியந்தக்கா சுப்ரமணியன், பேரால் கோவிந்தராஜ், சூளாங்குறிச்சி செல்வம் உட்பட 10 பேர் பேனரை அகற்றக்கோரி செந்தில்குமாரை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக விசாரணை செய்து, தி.மு.க.,வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
7 hour(s) ago
7 hour(s) ago