மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
18 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
18 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
21 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
21 hour(s) ago
விபி அகரம் ஊராட்சியில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணியினை ஒன்றிய துணை சேர்மன் துவக்கி வைத்தார்.சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம், விபி அகரம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நீடித்து வந்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து, புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், விபி அகரம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது.நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பி.டி.ஓ., ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயம் கோம்பையன், ஊராட்சி தலைவர் தென்னரசி பாண்டியன், துணை தலைவர் தனம் பாலகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் குமார், செங்கோடன், நிர்வாகிகள் வசந்தராயன், ஊராட்சி செயலர் குருசாமி, பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago