உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாரி மீது பைக் மோதி விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

லாரி மீது பைக் மோதி விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

கள்ளக்குறிச்சி : தச்சூர் புறவழிச்சாலையில் லாரி டிரைவர் திடீரென பிரேக் அடித்ததால் ஏற்பட்ட விபத்தில் பைக்கில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் விஸ்வநாதன்,28; பி.எட்., பட்டதாரி. இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள மொபைல் போன் கடையில் பணிபுரிகிறார். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் பைக்கில் கள்ளக்குறிச்சியில் இருந்து இந்திலி நோக்கி சென்றார்.தச்சூர் தனியார் பள்ளி அருகே சென்ற போது, அதே திசையில் முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் , விஸ்வநாதன் ஓட்டி சென்ற பைக் லாரியின் பின்னால் மோதியது. இதில் படுகாயமடைந்த விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த விஸ்வநாதனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை