உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பைக் பழுது பார்க்கும் பயிற்சி

 பைக் பழுது பார்க்கும் பயிற்சி

மூங்கில்துறைப்பட்டு: டிச. 6-: மூங்கில்துறைப்பட்டில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் பைக் பழுது பார்க்கும் இலவச பயிற்சி துவங்கியது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பைக் பழுது பார்க்கும் பயிற்சி, மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி சாலை தனியார் கட்டடத்தில் நேற்று துவங்கியது. 3 மாதம் நடக்கும் இலவச பயிற்சியில், மூங்கில்துறைப்பட்டு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பைக் பழுதுபார்க்கும் பயிற்சியினை பயிற்சியாளர் மகேஷ் நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ