உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் கடத்திய நபர் மீது வழக்கு

சாராயம் கடத்திய நபர் மீது வழக்கு

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அருகே பைக்கில் சாராயம் கடத்திய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை 10:00 மணி அளவில் மாதவி கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள வீரன் கோவில் அருகே வந்த பைக்கை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கார் டியூபில் 5 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது.சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்து தப்பிச்சென்ற ஷேசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை