உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கணவரைத் தாக்கிய மனைவி மீது வழக்கு

கணவரைத் தாக்கிய மனைவி மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: ரங்கநாதபுரத்தில் கணவரைத் தாக்கிய மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தைச் சேர்ந் தவர் மாரி மகன் சஞ்சீவ் காந்தி, 40; இவரது மனைவி சந்திரா. இவருக் கும் அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.இதனால், கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி இதுகுறித்து இளையராஜா, சந்திரா ஆகியோரிடம் கேட்டபோது, இருவரும் சேர்ந்து சஞ்சீவ் காந்தியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் இளையராஜா, சந்திரா ஆகிய இருவர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ