உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள்

டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள்

திருக்கோவிலுார்; ஜி.அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், திருக்கோவிலுாரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மழைக்காலம் துவங்குவதற்கு முன்னதாக, கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில், ஜி.அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், திருக்கோவிலுாரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் நகர் பகுதியில் உள்ள பஞ்சர் கடைகளில் பயன்பாடற்ற டயர்கள் தேக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து அப்புறப்படுத்தினர். சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காதவாறு துாய்மையாக பராமரித்துக் கொள்ள பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் சங்கரன் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதில் 150க்கும் மேற்பட்ட டயர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை