| ADDED : ஜன 14, 2024 05:05 AM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேர்தலில் ஓட்டளிப்பது தொடர்பான விழிப்புணர்வு கோலம் மற்றும் பாட்டுப்போட்டி நடந்தது.வாணாபுரம் அடுத்த அரியலுாரில் இயங்கி வரும், ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் ரேவதி தலைமை தாங்கினார். தாசில்தார் குமரன், தேர்தல் துணை தாசில்தார் பாண்டியன், துணை தாசில்தார் சேகர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சண்முகம் வரவேற்றார்.தேர்தலின் போது பொதுமக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளித்து தங்களது ஜனநாயக கடைமையினை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோலப்போட்டி நடந்தது.இதில், மாணவ, மாணவிகள் குழுவாக பிரிந்து கோலமிட்டனர். தொடர்ந்து, தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான பாடல்களை மாணவர்கள் எழுதி பாடினர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.