| ADDED : ஜன 10, 2024 11:30 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு கோலப்போட்டியினை அரசு செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ்.பி., சமய்சிங்மீனா ஆகியோர் பார்வையிட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம்-2024 கொண்டாடுவதை முன்னிட்டு, கலெக்டர் அலுவலக வாளகத்தில் தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டி நடத்தப்பட்டது.இந்த கோலப்போட்டியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலங்கள் போட்டனர்.இந்த கோலப்போட்டியினை கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ், மாவட்ட தேர்தல் அலுவலர் ஷ்ரவன்குமார், எஸ்.பி., சமய்சிங்மீனா ஆகியோர் பார்வையிட்டனர்.போட்டியில் சிறப்பான கோலங்கள் வரைந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, வாக்காளர் தினமான ஜனவரி 25ஆம் நாள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார். தொடர்ந்து, வாக்காளர்களின் விழிப்புணர்வுக்காகவும், வழிகாட்டுதலுக்காகவும் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்க மையத்தினையும், அலுவலர்கள் பார்வையிட்டனர்.