உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.நகர மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் உமாமகேஸ்வரி குணா முன்னிலை வகித்தார். கமிஷனர் கீதா வரவேற்றார்.நகராட்சி ஊழியர்கள் நகர மன்ற வளாகத்தில் கோலமிட்டு, புது பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., அவைத்தலைவர் குணா உட்பட பலர் பங்கேற்றனர்.ஆலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் செல்வகுமார் தலைமை தாங்கினார். எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கோல போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி தலைவர் மலர் பரிசு வழங்கினார். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி

பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் சசிகலா வரவேற்றார். விழாவில், கல்லுாரி வளாகத்தில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கல்லுாரி முதல்வர்கள் சிராஜ்தீன், பாஸ்கரன் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் உரியடித்தல், கோலப்போட்டி மற்றும் இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.

தியாகதுருகம்

தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், செந்தில்முருகன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். அலுவலக வளாகத்தில் பொங்கல் வைத்து, சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். துணை பி.டி.ஓ.,க்கள் கொளஞ்சிவேல், தயாபரன், முருகன், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.

செஞ்சி

ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி நர்சிங், கல்வியியல், பொறியியல், கலை அறிவியல், பார்மசி கல்லுாரி மாணவிகள், ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். 500 மாணவியரின் கோலாட்டத்தில், மாணவர்கள் பங்கேற்றனர். தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். இயங்குனர்கள் சாந்தி, சரண்யா பரிசு வழங்கினர். முதல்வர்கள் மணிகண்ணடன், கோவிந்தராஜ், முருகதாஸ், செந்தில்குமார், சசிகுமார், மேனகா காந்தி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

சின்னசேலம்

சின்னசேலம் இதயா மகளிர் பொறியியல் கல்லுாரியில் செயலாளர் ஜான் பிரிட்டோ மேரி தலைமை தாங்கினார். முதல்வர் ஜெனிட்டா, துணை முதல்வர் காந்திமதி, பிரீமா ரோஸ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி வளாகத்தில் மாணவிகள் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர். கும்மி அடித்தல், உறியடித்தல் மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி