மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
11 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
11 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
14 hour(s) ago
கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம் மூலமாக சஞ்சீவி மருத்துவமனை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதலுதவி பயிற்சி மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதன் துவக்க விழா கள்ளக்குறிச்சி துருகம் சாலை சஞ்சீவி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் முன்னிலை வகித்தார்.சஞ்சீவி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுஜாதா வரவேற்றார்.மாவட்ட திறன்மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளரான திருப்பூர் குமரன், மருத்துவமனை பொது மேலாளர் உமாமகேஸ்வரன் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார். பள்ளி வாகன ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்மைய பணியாளர்கள், போலீசார், தீயணைப்பு படை வீரர் உள்ளிட்டவர்கள் இந்த முதலுதவி சான்றிதழ் பெற்றிருப்பது கட்டாயம்.இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதுவரை விழுப்புரம், திருக்கோவிலுார், புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு சென்று இந்த சான்று பெற வேண்டி இருந்தது. தற்போது சஞ்சீவி மருத்துவமனையில் முதலுதவி பயிற்சி வகுப்பில் பங்கேற்று சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என ஜெயபாஸ்கரன் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் முதலுதவி பயிற்சியாளர்கள், பணியாளர்கள், கள்ளக்குறிச்சி டிரைவிங் ஸ்கூல் சங்க நிர்வாகிகள் புருஷோத்தமன், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ராம்குமார் நன்றி கூறினார்.
11 hour(s) ago
11 hour(s) ago
14 hour(s) ago