உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி சங்கத் தலைவர் இமானுவேல் சசிகுமார் தலைமை தாங்கினார். முகாமிற்கு நிதி வழங்கி உதவி செய்த நீலமங்கலம் ஆர்.கே.எஸ்., அக்ரி சர்வீஸ் சரண்ராஜ், பேபி சுஜிதா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் பங்கேற்றனர்.டாக்டர் ஷிவானி தலைமையில் மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற 260 பேருக்கு பரிசோதனை செய்தனர்.அதில், 103 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வாகி கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.முகாம் பணிகளை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் பெருமாள், ராமலிங்கம், வருங்கால தலைவர் ராஜேந்திரன், இயக்குனர் அம்பேத்கர், செல்வராஜ், சீனிவாசன், அரவிந்தன் ஆகியோர் செய்திருந்தனர். பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை