உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணையாற்றில் குப்பை: பா.ஜ.,வினர் அகற்றினர்

பெண்ணையாற்றில் குப்பை: பா.ஜ.,வினர் அகற்றினர்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் நடந்த திருவிழாவின்போது குவிந்த குப்பைகளை பா.ஜ.,வினர் அகற்றினர்.திருக்கோவிலுார் தென்பெண்ணையாற்றில் நேற்று முன்தினம் நடந்த ஆற்றுத் திருவிழாவின் போது ஏராளமானோர் குவிந்தனர். இதன் காரணமாக ஆற்றில் குப்பைகள் குவிந்தன.நேற்று காலை பா.ஜ., சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட தலைவர் கலிவரதன், நகர தலைவர் பத்ரி நாராயணன், முகையூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் ஆற்றில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றினர்.பா.ஜ., நிர்வாகிகள் புவனேஸ்வரி, ஏழுமலை, அழகேசன், ராஜாஜி, முருகன், உமாசங்கர், சுரேஷ், தினேஷ், விஜய் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை