உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

 பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த நாகலுாரை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி வள்ளியம்மை, 65; இவர், அதே பகுதியில் கூழ் கடை வைத்துள்ளார். கடந்த 16ம் தேதி இரவு வள்ளியம்மை வீட்டை பூட்டி விட்டு, பக்கத்து தெருவில் உள்ள தனது மகன் சகாதேவன் வீட்டிற்கு சென்று துாங்கினார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது, தனது வீட்டின் பின்பக்க கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 8 கிராம் தங்க நகையும், 20 கிராம் வெள்ளி பொருட்களையும் திருடி சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி