உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்ற கடைக்கு சீல்

குட்கா விற்ற கடைக்கு சீல்

ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் குட்கா விற்ற கடைக்கு, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீல் வைத்தார்.ரிஷிவந்தியம் அடுத்த வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாணாபுரத்தில் உள்ள தனியார் மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. தொடர்ந்து கடை உரிமையாளர் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த மன்னார் மகன் வெங்கடேசன் என்பவர் மீது பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்தனர். பின் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மூலம் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ