உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

 வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த கணங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி, 57; இவர், கடந்த 18ம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள அவது மற்றொரு வீட்டில் துாங்கினார். மறுநாள் காலை எழுந்து சென்று பார்த்தபோது பழைய சிமென்ட் ஷீட் போட்ட வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த ஒன்னரை சவரன் நகை மற்றும் 5000 ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்