உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஐ .ஜே.கே., மாநாட்டில் பங்கேற்க மாவட்ட தலைவர் அழைப்பு

ஐ .ஜே.கே., மாநாட்டில் பங்கேற்க மாவட்ட தலைவர் அழைப்பு

திருக்கோவிலுார் : திருச்சியில் நடக்கும் ஐ.ஜே.கே., மாநாட்டில் திரளான தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என, அக்கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.அவர், கூறியதாவது; ஐ.ஜே.கே., சார்பில், மார்ச் 3ம் தேதி திருச்சி அடுத்த சிறுகனூர் பகுதியில் 'தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்' தலைப்பில் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தலைமையில், கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச்செயலாளர் ஜெயசீலன், மாநில முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.இதில் விழுப்புரம் மத்தியமாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாககலந்து கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை