உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஐ.ஜே.கே., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

 ஐ.ஜே.கே., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதி ஐ.ஜே.கே., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருக்கோவிலுார் தொகுதி ஐ.ஜே.கே., சார்பில் வரும் 21ம் தேதி கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் ரவிபச்சமுத்து தலைமையில் தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருக்கோவிலுாரில் நடந்தது. மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். ஐ.ஜே.கே., மாநில துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார், வரும் 21ம் தேதி நடைபெற உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் கவுரவ தலைவர் சுனில்குமார், ரிஷிவந்தியம் தொகுதி மாவட்ட தலைவர் பொன்முடி, திருக்கோவிலுார் தொகுதி மாவட்ட துணைத் தலைவர் தங்கவேல், இலக்கிய அணி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட வேந்தர் பேரவைச் செயலாளர் குருமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை