| ADDED : ஜன 02, 2024 11:45 PM
உளுந்துார்பேட்டை : ஆசனுார் சிப்காட் தொழிற்சாலையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய பெட்ரோலிய குழாய் முனையம் துவக்க விழா நடந்தது.உளுந்துார்பேட்டை ஆசனுார் சிப்காட் தொழிற்சாலையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய பெட்ரோலிய குழாய் முனையம் துவக்க விழா நடந்தது. இதில் திருச்சியில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.சிப்காட் தொழிற்சாலையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஷ்ரவன்குமார், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் பங்கேற்றனர்.ஆசனுார் இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவன முதன்மை மேலாளர் லட்சுமிகாந்த்பட்ரா, பொது மேலாளர் பிரசன்ன குமார், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.