ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் கூடுதல் இயக்குனர் ஆய்வு
சங்கராபுரம்: சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார். சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் அ.பாண்டலம் ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரூ.10 லட்சத்தில் அரசு துவக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் கவிதா ஆய்வு செய்தார். ஆய்வின் போது திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மாவட்ட செயற்பொறியாளர் செல்வகுமரன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, பி.டி.ஓ.,க்கள் நாராயணசாமி, ராதாகிருஷ்ணன், ஒன்றிய பொறியாளர்கள் ராஜகோபால், ஹரிகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன் உடனிருந்தனர்.