உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருட்டு

அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருட்டு

கள்ளக்குறிச்சி: வி.கிருஷ்ணாபுரத்தில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை, பணம் திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த வி.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னனையன் மகன் ராமசாமி, 51; அரசு பஸ் கண்டக்டர். கடந்த 5ம் தேதி மதியம் 1.30 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு ராமசாமி மற்றும் அவரது மனைவி அலமேலுவும் வெளியே சென்றனர்.பிற்பகல் 3:00 மணியளவில் வந்து பார்த்தபோது, வீடு திறந்து கிடந்தது. உள்ளே பீரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து வீடு புகுந்து திருடிய நபரைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை