மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
12 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
12 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
15 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:அதனையொட்டி அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில், மொபைல்போன் மற்றும் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் தங்களது நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கேற்ப பணியாட்களை தேர்வு செய்கின்றனர்.எனவே, மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்தவர்கள், டிப்ளமோ, டிகிரி உள்ளிட்ட பட்டதாரி ஆண்கள், பெண்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம். விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
12 hour(s) ago
12 hour(s) ago
15 hour(s) ago