உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துாக்கிட்டு இறந்தவர் உடல் எரிப்பு: போலீஸ் விசாரணை

துாக்கிட்டு இறந்தவர் உடல் எரிப்பு: போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை தகனம் செய்தது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் இளையராஜா, 26; இவர், கடந்த 12ம் தேதி மாலை 6:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் துாக்கில் தொங்கி இறந்தார்.இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், இளையராஜாவின் உடலை எரித்தனர்.இது குறித்து வி.ஏ.ஓ., பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை