உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எம்.எல்.ஏ. மகன் வீட்டில் இளம்பெண்ணுக்கு கொடுமை

எம்.எல்.ஏ. மகன் வீட்டில் இளம்பெண்ணுக்கு கொடுமை

உளுந்துார்பேட்டை:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த திருநறுங்குன்றத்தை சேர்ந்த 18 வயது பெண் சென்னை திருவான்மியூரில் அபார்ட்மென்டில் வசித்து வரும் தி.மு.க. - எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் வீட்டில் ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்தார்.அவரை எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் அவரது மனைவி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறியும் எம்.எல்.ஏ.வின் மகன் அனுப்பவில்லை.இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்த இளம்பெண் தன் தாயிடம் நடந்தவற்றை கூறி தனக்கு ஏற்பட்ட காயங்களை காண்பித்தார். தொடர்ந்து உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.திருநாவலுார் போலீசார் விசாரணை நடத்தினர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மகன் குடும்பத்தில் வீட்டு வேலை செய்த பெண்ணை சித்ரவதை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி