உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் இறப்பில் சந்தேகம் தாய் புகார்

மகள் இறப்பில் சந்தேகம் தாய் புகார்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த எரவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி குணவதி, 25; இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த 15 ம் தேதி பிரச்னை அதிகமான நிலையில் அன்று மாலை 6:00 மணி அளவில் ஏரவளம் சுடுகாடு அருகே இருக்கும் வேப்ப மரத்தில் குணவதி துாக்கில் இறந்து கிடந்தார். மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் அஞ்சலாட்சி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்