உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வருவாய்த்துறை சார்பில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் இருந்து விழிப்புணர்வு பேரணி துவங்கியது. தாசில்தார் மாரியாப்பிள்ளை வரவேற்றார். வருவாய் ஆய்வாளர்கள் மூர்த்தி, சதீஷ் முன்னிலை வகித்தனர்.ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமை தாங்கி, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரணியில் திருக்கோவிலுார் தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோஷங்களை எழுப்பி சென்றனர். தொடர்ந்து மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.தேர்தல் துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வி.ஏ.ஓ., ரகுராமன், சுரேஷ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை