மூங்கில்துறைப்பட்டில் புதிய சாலை 3 மாதத்தில் பஞ்சர்
மூங்கில்துறைப்பட்டு: ஆற்கவாடியில் இருந்து ஈருடையாம்பட்டு கிராமத்திற்கு அமைத்த தார் சாலை 3 மாதத்தில் ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கிறது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஆற்கவாடியில் இருந்து ஈருடையாம்பட்டு வரை ரூ. 34 லட்சம் மதிப்பில் 452 மீ., துாரத்திற்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு, புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார் சாலையில் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தார் சாலைகள் ஆங்காங்கே பிதுங்கி உள்ளது. தரமற்ற முறையில் சாலை அமைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மீண்டும் தரமான சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.